சமந்தா-விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'குஷி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

'குஷி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சமந்தா-விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'குஷி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

சென்னை,

இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் சமந்தா-விஜய் தேவரகொண்டா நடிக்கும் படத்திற்கு 'குஷி' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிவடைந்த நிலையில், சமந்தா தசை அழற்சி நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் படப்பிடிப்புப் பாதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து மகளிர் தினத்தையொட்டி சமந்தா இப்படத்தின் படப்பிடிப்பில் இணைந்தார். இதனை படக்குழு புகைப்படங்களை வெளியிட்டு அறிவித்திருந்தது.

இந்நிலையில், 'குஷி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற செப்டம்பர் 1-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Vijay Deverakonda (@TheDeverakonda) March 23, 2023 ">Also Read:

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com