சண்டை காட்சிகளில் சமந்தா சாகசம்

சமந்தாவின் சாகசங்கள், படம் பார்ப்பவர்களை நிச்சயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள் யசோதா பட டைரக்டர்கள்.
சண்டை காட்சிகளில் சமந்தா சாகசம்
Published on

சமந்தா நடித்து வரும் யசோதா கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட படம். இப்படத்தில், அவருக்கு சண்டை காட்சி இருக்கிறது. அந்த காட்சிகளில் சமந்தாவின் சாகசங்கள், படம் பார்ப்பவர்களை நிச்சயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள் டைரக்டர்கள் ஹரி-ஹரீஷ். இவர்கள் மேலும் கூறுகையில், இது, அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த திகில் படம். பார்வையாளர்களை தியேட்டர்களுக்கு கவர்ந்து இழுக்கும் கதையம்சம் கொண்ட படம். சமந்தா நடிப்பில் மட்டுமல்லாமல், சண்டை காட்சிகளிலும் பாராட்டும்படி நடித்து இருக்கிறார்.

முதல்கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்தி முடித்துவிட்டு, இப்போது கொடைக்கானலில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருக்கிறோம். படத்தை ஆகஸ்டு மாதம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வெளியிட முடிவு செய்துள்ளோம் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com