சமந்தா நடித்துள்ள 'மா இன்டி பங்காரம்' படத்தின் டிரைலர் வெளியானது

'மா இன்டி பங்காரம்' திரைப்படம் வருகிற ஜூன் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சமந்தா நடித்துள்ள 'மா இன்டி பங்காரம்' படத்தின் டிரைலர் வெளியானது
Published on

சென்னை,

சமந்தா ரூத் பிரபு கடைசியாக கடந்த ஆண்டு வெளியான 'சுபம்' திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இந்த படம் அவரது தயாரிப்பில் வெளியான முதல் படமாகும். இதனைத் தொடர்ந்து 'மா இன்டி பங்காரம்' படத்தை சமந்தா தயாரித்து நடித்துள்ளார்.

பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியுள்ள இந்த படத்தில் கவுதமி, மஞ்சுஷா மற்றும் திகந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.

1980-களின் பின்னணியில் குடும்பம் மற்றும் அதிரடியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில், சமந்தா அமைதியான மருமகளாகவும், அதே நேரத்தில் சவால்களை தைரியமாக எதிர்கொள்ளும் அதிரடி பெண்ணாகவும் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் மற்றும் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

'மா இன்டி பங்காரம்' திரைப்படம் வருகிற ஜூன் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதிரடி ஆக்சன் காட்சிகளுடன் வெளியாகி உள்ள இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com