சமந்தா தயாரித்துள்ள "சுபம்" படத்தின் டிரெய்லர் அப்டேட்!

'சுபம்' படத்தின் டிரெய்லர் ரிலீஸ் குறித்த அப்டேட்டை தனது எக்ஸ் பக்கத்தில் சமந்தா வெளியிட்டுள்ளார்.
சென்னை,
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான சிட்டாடல் தொடரில் நடித்திருந்தார். தற்போது மேலும் ஒரு வெப் தொடரில் நடித்து வருகிறார். சமந்தா சமீபத்தில் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற இந்த நிறுவனத்தின் கீழ் சமந்தா "சுபம்" என்ற படத்தை தயாரித்திருக்கிறார். பிரவீன் காந்த்ரேகுலா இயக்கும் இப்படத்தில் பல புது முகங்கள் நடித்திருக்கின்றனர். சமந்தா தயாரித்த முதல் படம் என்பதால் இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படம் அடுத்த மாதம் 9-ம் தேதி வெளியாக உள்ளது.
இப்படம், சீரியல் கதைகளை விரும்பிப் பார்க்கும் ஆவி புகுந்த பெண்ணை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. திருமணத்துக்குப் பிறகு அப்பெண்ணுடன் ஏற்படும் நெருக்கடிகளை சந்திக்கும் குடும்பம் என நகைச்சுவையாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. நாயகனாக ஹர்ஷித், நாயகியாக ஷிரியா நடிக்க, சரண், ஷாலினி, கவிரெடி ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட பலர் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர்.சினிமா பண்டி படத்தை எடுத்து கவனம் ஈர்த்த, எழுத்தாளர் வசந்த் மரிகாண்டி, இயக்குநர் பிரவீன் இணைந்து இப்படத்தை எடுத்துள்ளனர்.
இந்நிலையில் சமந்தா தனது எக்ஸ் பக்கத்தில், "சுபம் டிரெய்லர் எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம்" எனக் கூறியுள்ளார்.






