சமந்தா ஆன்மிக பயணம்

சமந்தா ஆன்மிக பயணம்
Published on

சமந்தா நடிப்பில் சமீபத்தில் வந்த படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. சாகுந்தலம் படுதோல்வி அடைந்தது. தற்போது விஜய்தேவரகொண்டா ஜோடியாக குஷி தெலுங்கு படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் தமிழிலும் வெளியாக இருக்கிறது.

ஏற்கனவே சமந்தாவுக்கு மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக அவர் சிகிச்சை எடுத்தும் குணமாகவில்லை.

எனவே ஒரு வருடம் சினிமாவை விட்டு விலகி அமெரிக்கா சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காகவே புதிய படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தமாகவில்லை.

இந்த நிலையில் சமந்தா தற்போது கோவில் கோவிலாக ஆன்மிக பயணம் தொடங்கி இருக்கிறார். வேலூரை அடுத்து உள்ள ஸ்ரீபுரம் தங்க கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அங்குள்ள சுவர்ண லட்சுமி அம்மன் சிலைக்கு பால் அபிஷேகம் செய்தார். மத குருமார்களிடமும் ஆசி பெற்றார். தொடர்ந்து பல கோவில்களுக்கு சென்று வழிபட முடிவு செய்து இருக்கிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com