சமுத்திரக்கனி - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் “இசகப்பட்டினம்” வெப்தொடரின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

‘இசகப்பட்டினம்’ வெப்தொடர், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வரும் ஜூலை 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
சமுத்திரக்கனி - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் “இசகப்பட்டினம்” வெப்தொடரின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனி மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கும் புதிய வெப்தொடர் ‘இசகப்பட்டினம்’. இந்த வெப்தொடர் அதிரடி கலந்து கிரைம் திரில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த தொடரை கேரி பி.ஹெச். இயக்கியுள்ளார். திரைக்கதையை பிரசாந்த் ரகதியும், வசனத்தை தாஜுதீன் சையத்தும் எழுதியுள்ளனர்.

தமடா மீடியா புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ் ராகுல் தமடா மற்றும் சாய்தீப் ரெட்டி போரா ஆகியோர் இந்தத் தொடரை தயாரிக்கிறார்கள். மேலும் இந்தத் தொடரில் சுனில், நரேஷ் அகஸ்தியா, மெரின் பிலிப், ரோகினி, ரவி வர்மா மற்றும் மைம் கோபி உள்ளிட்ட பலர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

முன்னதாக வட சென்னை மற்றும் நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் சமுத்திரக்கனி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய இருவரும் இணைந்து நடித்துள்ள நிலையில், மூன்றாவது முறையாக இசகப்பட்டினம் தொடரில் ஒன்றாக நடிக்கிறார்கள்.

சித்தாந்தம் மற்றும் சமூக நீதி தொடர்பாக தந்தைக்கும் மகளுக்கும் இடையே ஏற்படும் மோதலைப் பிரதானப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 7 எபிசோடுகள் கொண்ட இசகப்பட்டினம் தொடர், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வரும் ஜூலை 2 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com