"மக்கள் பணியாற்ற வந்த தைரியமான முதல் மனிதன்"- விஜய்க்கு சமுத்திரகனி வாழ்த்து

பிரபஞ்சம் உம்மை வெல்லச் செய்யட்டும் என விஜய்க்கு நடிகரும் இயக்குநருமான சமுத்திரகனி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
"மக்கள் பணியாற்ற வந்த தைரியமான முதல் மனிதன்"- விஜய்க்கு சமுத்திரகனி வாழ்த்து
Published on

சென்னை,

நடிகர் விஜய், அரசியல் கட்சி தொடங்கியுள்ளதாக நேற்று அறிவித்தார். தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். விஜய் அரசியல் கட்சித் தொடங்குவது என்பது பல காலமாக பேசப்பட்டு வந்தாலும், இன்று அரசியல் கட்சியைத் தொடங்கியிருப்பது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் நடிகர் விஜய்க்கு நடிகரும் இயக்குநருமான சமுத்திரகனி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது;

"திரை உலகில் உச்சத்தின் உச்சத்தில் இருக்கும்போது மக்கள்பணியாற்ற வந்த தைரியமான முதல் மனிதன். பிரபஞ்சம் உம்மை வெல்லச் செய்யட்டும்.. உம் கனவுகள் மெய்ப்படட்டும். வாழ்த்துக்கள் சகோதரா" என அதில் அவர் தெரிவித்துள்ளார்.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com