கதையின் நாயகனாக சமுத்திரக்கனி

கதையின் நாயகனாக சமுத்திரக்கனி
Published on

சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படம் `விமானம்'. இதில் மாஸ்டர் துருவன், அனுசுயா பரத்வாஜ், மீரா ஜாஸ்மின், நான் கடவுள் ராஜேந்திரன், ராகுல் ராமகிருஷ்ணா, தன்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசை: ஶ்ரீஅண் அர்ஜுன், ஒளிப்பதிவு: விவேக் கலேபு. வசனம்: பிரபாகர். இந்தப் படத்தை சிவ பிரசாத் யானலா டைரக்டு செய்துள்ளார்.

படத்தின் பிரத்யேக வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். அதில் தந்தையும் அவரது ஏழு வயது மகனும் பேசத் தொடங்குகின்றனர். அவர்களுக்குள் ஆசை என்றால் என்ன என்பதை பரிமாறிக்கொள்கிறார்கள். குழந்தை விமானத்தில் உயரமாக பறக்க விரும்புகிறது. பொருளாதார நிலை காரணமாக அது நிறைவேற்ற முடியாத கனவாக இருந்தாலும் குழந்தையின் ஆசையை தந்தை பாராட்டுவதுபோல் வீடியோவில் இடம்பெற்று உள்ளது.

அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் உணர்வுப்பூர்வமான படமாக தயாராகி இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தனர். ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் கே கே கிரியேட்டிவ் ஒர்க்சுடன் இணைந்து கிரண் கோர்ராபாரி தயாரிக்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com