ராம் பொத்தினேனி இயக்கி நடிக்கும் படத்தில் சம்யுக்தா மேனன்?... எகிறும் எதிர்பார்ப்பு

இந்த படத்தின் மூலம் ராம் பொத்தினேனி முதன்முறையாக இயக்குநராக அறிமுகமாகிறார்.
சம்யுக்தா மேனன்
Published on

சென்னை,

நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் புதிய திரைப்படத்தில் நடிகை சம்யுக்தா மேனன் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இயக்குநராக அறிமுகம்

இந்தப் படத்தின் மூலம் ராம் போத்தினேனி இயக்குநராக அறிமுகமாகிறார். இயக்குவதோடு கதாநாயகனாகவும் அவர் நடிப்பதால் இந்த படம் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கதையைக் கேட்டு உடனே சம்மதம்?

இந்த படத்தின் கதாநாயகி கதாபாத்திரத்திற்காக பல முன்னணி நடிகைகளின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இறுதியாக சம்யுக்தா மேனனையே படக்குழு தேர்வு செய்துள்ளதாக தெரிகிறது.

கதையை கேட்ட சம்யுக்தா மேனனுக்கு அது மிகவும் பிடித்து போனதால், உடனடியாக படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல் முறையாக

அது உண்மையாகும் பட்சத்தில் ராம் பொத்தினேனி மற்றும் சம்யுக்தா மேனன் இணைந்து நடிக்கும் முதல் திரைப்படம் இதுவாக இருக்கும். நடிகை சம்யுக்தா மேனன் தற்போது 'சுயம்பு', 'ஸ்லம்டாக்' உள்ளிட்ட பல திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com