தெலுங்கில் நடிப்பது சிரமம் - நடிகை சம்யுக்தா மேனன்

தெலுங்கில் அலங்காரம் செய்துகொண்டு நடிப்பது மிகவும் சிரமமாக உள்ளது என்று பிரபல மலையாள நடிகை சம்யுக்தா மேனன் தெரிவித்துள்ளார்.
தெலுங்கில் நடிப்பது சிரமம் - நடிகை சம்யுக்தா மேனன்
Published on

மலையாளத்தில் தீவண்டி, லில்லி, கடுவா, தெலுங்கில் பீம்லா நாயக் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சம்யுக்தா மேனன். இவர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழ் சினிமாவில் களரி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து மலையாளத்தில் உருவான உயரே படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு, அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து, யமந்தன் பிரேமாகதா எனும் படத்தில் நடித்தார். அடுத்தடுத்து மலையாளம் தெலுங்கு, தமிழ் என தென்னிந்திய மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார்.

தமிழில் அண்மையில் தனுஷூக்கு ஜோடியாக வாத்தி திரைப்படத்தில் நடித்திருந்தார். இவர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் அடுத்து சுயம்பு படத்தில் சம்யுக்தா நடித்து வருகிறார். நிகில் சித்தார்த் இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் உருவாகிறது. அண்மையில் ஆதிசக்தி என்ற அமைப்பையும் அவர் தொடங்கியிருந்தார்.

தெலுங்கில் நடிப்பது கடினமாக இருந்தது. காரணம் மொழி அல்ல அலங்காரம் எனக் கூறியுள்ளார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில், "தெலுங்கில் அலங்காரம் செய்துகொண்டு நடிப்பது எனக்கு கடினமாக இருந்தது. மலையாளத்தில் மிகவும் இயற்கையான அலங்காரமே தேவைப்படுவதால் நடிக்க எளிதாக இருக்கும். மேலும் மலையாளத்தில் சுதந்திரமாக இருக்கும். தெலுங்கில் நமது அழகு குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியுள்ளது. அது எனது வசதிக்கு எதிரான மனநிலையை கொண்டது. வசனத்தை மனப்பாடம் செய்துகொண்டிருக்கும்போது அல்லது படப்பிடிப்பின்போது அலங்காரம் செய்பவர்களை மட்டுமே அனுமதிப்பேன். அழகாக இல்லையென்றால் சேலை நிபுணர் படப்பிடிப்புக்கு இடையே இடையூறு செய்வார். இது கேட்பதற்கு சிறுபிள்ளைதனமாக இருந்தாலும் எனக்கு எளிதானது இல்லை. எப்போதும் எனது முகத்தில்,தோலில் எதுவோ இருப்பதுபோலவே இருக்கிறது. மலையாளத்தில் அலங்காரங்கள் இல்லாமலும் கூந்தலை முடியாமலும் நடிக்கலாம் என்றார்.

View this post on Instagram

மலையாளத்தில் மோகன்லாலுடன் ராம் படத்திலும், தெலுங்கில் ஸ்வயம்பு படத்திலும் பெயரிடப்படாத நகைச்சுவை படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com