

பேஷன் ஸ்டூடியோஸ், ஜி ஸ்குவாட் மற்றும் தி ரூட் பட நிறுவனங்கள் தயாரிப்பில் நிரஞ்சன் இயக்கியுள்ள புதிய படம் 'மிஸ்டர் பாரத்'. பாரத், சம்யுக்தா விஸ்வநாதன், பால சரவணன் நடித்துள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது. இதுகுறித்து சம்யுக்தா விஸ்வநாதன் கூறும்போது, 'கட்சி சேர...' பாடலை தொடர்ந்து, எனக்கு வாய்ப்பு கிடைத்து, நான் நடித்த முதல் படம் இதுதான். ஆனால் இந்த படம் இப்போது தான் வருகிறது.
படங்களில் ஒரே மாதிரியாக நடிக்க நான் விரும்பவில்லை. வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து கலக்கவே ஆசைப்படுகிறேன். அதேவேளை காமெடி கதைகளில் நடிக்க கொஞ்சம் பயம் இருக்கிறது. லேசாக தவறினாலும், காட்சியில் எதார்த்தம் இருக்காது. எனவே பார்க்க எளிதாக இருந்தாலும் காமெடி படங்களில் நடிப்பது கடினம்தான்.
இதுவரை நான் எடுத்த முடிவுகள் அத்தனையும் யோசித்து, பெற்றோரிடம் கலந்துபேசி எடுப்பது தான். என்னை பொறுத்தவரை ரசிகர்கள் என்னை பார்த்து ரசிக்க வேண்டும், அன்பை செலுத்த வேண்டும். விமர்சிக்கும்படியான போக்குகளில் நான் ஈடுபட மாட்டேன். எனக்கு நிறைய சவால்கள் உள்ளன. போகிற போக்கில் பார்த்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் பயணிக்கிறேன்” என்றார்.