சம்​யுக்​தாவின் “சு​யம்​பு” படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

நிகில் சித்​தார்த்தா, சம்யுக்தா நடித்த ‘சுயம்​பு’ படம் ஏப்​ரல் 10ம்​ தேதி வெளியாகிறது.
சம்​யுக்​தாவின் “சு​யம்​பு” படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

நிகில் சித்​தார்த்தா கதா​நாயக​னாக நடிக்​கும் வரலாற்​றுப் படம், ‘சுயம்​பு’. ஆயிரம் ஆண்​டு​களுக்கு முன் நடக்​கும் கதையைக் கொண்ட இப்​படத்தை தாகூர் மது வழங்க, பிக்​சல் ஸ்டூடியோ சார்​பில் புவன் மற்​றும் ஸ்ரீகர் தயாரிக்​கின்​றனர். கேஜிஎப் புகழ் ரவி பஸ்ரூர் இசையமைத்திருக்கிறார்.

பரத் கிருஷ்ண​ மாச்​சாரி இயக்​கி​யுள்ள இப்​படத்​தில் சம்​யுக்​தா, நபா நடேஷ் உள்பட பலர் நடித்​துள்​ளனர்​. இப்​படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் உரு​வாகி​உள்​ளது. இதன் படப்​பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகள் நடை​பெற்று வரு​கின்​றன. இப்​படம் பிப்​ரவரி 13-ம் தேதி வெளி​யாக இருந்த நிலையில், படம்​ ஏப்​ரல் 10ம்​ தேதிக்குத் தள்​ளிவைக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில், ‘சுயம்​பு’ படத்தின் டீசர் வரும் 11ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com