25 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் நடிக்க வரும் சங்கீதா


Sangeetha to act in Tamil after 25 years
x

இவர் விஜய் ஜோடியாக 'பூவே உனக்காக' படத்தில் நடித்து பிரபலமானார்.

சென்னை,

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகி ஆனவர் சங்கீதா. இவர் விஜய் ஜோடியாக 'பூவே உனக்காக' படத்தில் நடித்து பிரபலமானார். இதயவாசல், தாலாட்டு, கேப்டன் மகள், சீதனம், அம்மன் கோவில் வாசலிலே, நம்ம ஊரு ராஜா உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

மலையாளத்திலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். 2000-ல் ஒளிப்பதிவாளர் சரவணனை காதல் திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார். பின்னர் 2014-ல் ஒரு மலையாள படத்தில் நடித்தார்.

அதன்பிறகு மீண்டும் நடிப்பில் இருந்து ஒதுங்கிய சங்கீதா, 9 வருடங்களுக்கு பிறகு 'சாவெர்' என்ற மலையாளப் படத்தில் நடித்தார். கடைசியாக இவர் தமிழில் 2000-ம் ஆண்டில் வெளியான 'கண் திறந்து பாரம்மா என்ற படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், 25 வருட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு வந்துள்ளார் சங்கீதா. அதன்படி, பரத் நடிப்பில் உருவாகி வரும் 'காளிதாஸ் 2' படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் பவானி ஸ்ரீ, அபர்ணதி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


1 More update

Next Story