"லோகேஷ் என்னை வீணடித்து விட்டார்" - சஞ்சய் தத்

லியோ படத்தில் விஜய்க்கு தந்தையாக சஞ்சய் தத் நடித்திருந்தார்.
சென்னை,
லோகேஷ் கனகராஜின் லியோ (2023) படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகர் சஞ்சய் தத், சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வில், தனக்கு "பெரிய வேடம்" கிடைக்காததால் படத்தில் "வீணடிக்கப்பட்டதாக" தெரிவித்தார்.
துருவா சர்ஜா நடித்துள்ள 'கேடி - தி டெவில்'' படத்தின் தமிழ் டீசர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில், படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டிருக்கின்றனர். அப்போது சஞ்சய் தத், ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் அஜித் உடனான தனது உறவை பற்றி பகிர்ந்து கொண்டார்.
தொடர்ந்து, லியோ படத்தில் நடித்தது பற்றி அவர் பேசுகையில், ''விஜய்யுடன் படம் பண்ணியிருக்கேன், எனக்கு அது ரொம்பப் பிடிச்சிருந்தது. ஆனால் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மேல் எனக்கு கோபம். லியோ படத்தில் எனக்கு பெரிய கதாபாத்திரம் கொடுக்காமல் என்னை வீணடித்து விட்டார்'' என்றார்.
Related Tags :
Next Story






