கதாநாயகனாக சந்தானம்

ஆனந்த் நாராயண் இயக்கும் புதிய படத்தில் நாயகனாக சந்தானம் நடித்துள்ளார்.
கதாநாயகனாக சந்தானம்
Published on

நகைச்சுவை நடிகர் சந்தானம் தொடர்ந்து கதாநாயகனாக நடித்து வருகிறார். தற்போது ஆனந்த் நாராயண் இயக்கும் புதிய படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இதில் சந்தானத்தின் ஜோடியாக பிரியாலயா நடித்து நாயகியாக அறிமுகமாகிறார்.

தம்பி ராமையா, மனோபாலா, முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா, பால சரவணன், மாறன், கூல் சுரேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தை வெள்ளைக்கார துரை, தங்கமகன், மருது, ஆண்டவன் கட்டளை படங்களை எடுத்த ஜி.என். அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

படக்குழுவினர் கூறும்போது, ``கதையம்சத்தோடு நகைச்சுவை கலந்த கமர்ஷியல் படமாக இது உருவாகிறது. அனைத்து இளைஞர்களும் ரசித்து கொண்டாடும் வகையில் சந்தானம் கதாபாத்திரம் இருக்கும். டி.இமானின் இசையில் மூன்று பாடல்கள் சிறப்பாக வந்துள்ளன. பாடல் வரிகளை இயக்குனர் விக்னேஷ் சிவன், முத்தமிழ் ஆகியோர் எழுதி உள்ளனர். எழிச்சூர் அரவிந்தன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி உள்ளார்'' என்றனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இறுதிகட்ட பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன. ஒளிப்பதிவு: ஓம் நாராயண்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com