நீண்ட தாடியோடு புதிய தோற்றத்தில் சந்தானம்

சந்தானம் புதிய தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது.
நீண்ட தாடியோடு புதிய தோற்றத்தில் சந்தானம்
Published on

தமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த சந்தானம் திடீரென்று கதாநாயகனாக மாறினார். அவரை ஹீரோவாக வைத்து எடுத்த படங்கள் நல்ல வசூல் பார்த்துள்ளன. இதையடுத்து கதாநாயகனாக நடிக்க படங்கள் குவிகின்றன. அதற்கேற்ப கடும் உடற்யற்சிகள் செய்து தோற்றத்தையும் மாற்றி இருக்கிறார். நடிகர் ஆர்யாவுடன் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நீண்ட தூரம் அடிக்கடி சைக்கிள் சவாரி செய்தும் தேகத்தை மெருகேற்றுகிறார்.

தற்போது பிஸ்கோத், டிக்கிலோனா ஆகிய படங்களில் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் பிஸ்கோத் படம் முடிந்து தியேட்டர்கள் திறக்க தாமதம் ஆவதால் ஓ.டி.டி தளத்தில் வெளியிட ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சந்தானம் புதிய தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது.

அதில் நீண்ட தாடியுடன் கூலிங் கிளாஸ் அணிந்து மொத்தமாக ஆளே மாறிப்போய் இருக்கிறார். இது ஜான்சன் இயக்கத்தில் நடிக்க உள்ள அவரது அடுத்த படத்துக் கான கெட்டப் என்று கூறப் படுகிறது. இந்த புகைப்படம் வைரலாகி இணைய தளத்தை கலக்கி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com