சந்தானத்தின் “லவ் பைட்” படத்தின் புரோமோ வீடியோ வெளியானது

செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் சந்தானம், அபர்ணா தாஸ் நடிக்கும் ‘லவ் பைட்’ படத்தின் புரோமோ வீடியோ வெளியானது.
சந்தானத்தின்  “லவ் பைட்” படத்தின்  புரோமோ வீடியோ வெளியானது
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்து கதாநாயகனாக வெற்றிகரமாக பயணம் செய்து வருபவர் சந்தானம். 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான அவர், தொடர்ந்து 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்', 'இங்க என்ன சொல்லுது', 'இனிமே இப்படித்தான்', 'சக்கப்போடு போடு ராஜா', 'தில்லுக்கு துட்டு' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சந்தானம் தற்போது அறிமுக இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் எழுதி இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி இந்த படத்தை தயாரிக்கிறார். இதில் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ், ஆனந்த்ராஜ், கல்கி ராஜா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். ஜாம்பி கதையை மையமாக கொண்டு திரில்லர் மற்றும் நகைச்சுவை கலந்த பாணியில் உருவாகும் இந்த படத்திற்கான டைட்டில் சமீபத்தில் வெளியானது. அதன்படி, இந்த படத்திற்கு ‘லவ் பைட்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்திற்கான பூஜை கடந்த 8ந் தேதி நடைபெற்றது. அதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இது தொடர்பான வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், ‘லவ் பைட்’ படத்தின் புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com