சந்தோஷ் பிரதாப் நடிக்கும் ‘சிக்னல் அட் 11.30’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

சந்தோஷ் பிரதாப், பவ்யா திரி​கா நடிக்கும் ‘சிக்னல் அட் 11.30’ படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
சந்தோஷ் பிரதாப் நடிக்கும் ‘சிக்னல் அட் 11.30’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு
Published on: 

சந்தோஷ் பிரதாப், பவ்யா திரி​கா நடிக்கும் ‘சிக்னல் அட் 11.30’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிளை படக்குழு வெளியிட்டுள்ளது.

மலர்விழி நடேசன் இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப் நாயகனாக நடிக்கும் படம் ‘சிக்னல் அட் 11:30’. இந்தப் படத்தில் பவ்யா திரி​கா நாயகியாக நடித்துள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார். பூஜிதா பொன்​னா​டா, ஜெயப் பிர​காஷ், முனீஷ்​காந்த் உள்பட பலர் நடித்​துள்​ளனர். இப்​படத்தை அலர் ஸ்டூடியோஸ் சார்​பில் மலர்​விழி நடேசன், டாக்​டர் ஷிவானி சுப்​பிரமணி தயாரித்​துள்​ளனர்.

பர்ஸ்ட் லுக் வெளியீடு

இப்​படத்​தின் பர்ஸ்ட் லுக் கடந்த பிப்ரவரியில் வெளி​யானது. “இரவு 11.30 மணிக்கு ஒரு சிக்னலில் கதா​நாயக​னுக்கு நேரும் எதிர்​பா​ராத சம்பவம்​ அவனுடைய வாழ்க்​கை​யை எப்​படி மாற்​றுகிறது என்​பது கதை” என்றது படக்குழு.

டீசர் வெளியீடு

‘சிக்னல் அட் 11.30’ படத்தின் டீசரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.

பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

இந்நிலையில், ‘சிக்னல் அட் 11.30’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிளை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘ஜோஜோமா’ பாடலை மோகன்ராஜன் வரிகளில் ஹரிச்சரண் பாடியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com