’துரந்தர்’ பார்த்து கண்ணீர் விட்ட நடிகையின் பெற்றோர்

‘துரந்தர்’ படத்திற்குப் பிறகு, நடிகை சாரா அர்ஜுன் ‘யூபோரியா’ படத்தில் நடித்துள்ளார்.
’துரந்தர்’ பார்த்து கண்ணீர் விட்ட நடிகையின் பெற்றோர்
Published on

சென்னை,

துரந்தர் படத்தைப் பார்த்து தனது பெற்றோர் மகிழ்ச்சியில் அழுததாக நடிகை சாரா அர்ஜுன் தெரிவித்துள்ளார்.

‘துரந்தர்’ படத்திற்குப் பிறகு, நடிகை சாரா அர்ஜுன் தற்போது தனது அடுத்த படமான ‘யூபோரியா’ ரிலீஸுக்கு தயாராகி வருகிறார். இந்த படம் பிப்ரவரி 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

படத்தின் புரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் சாரா அர்ஜுன், சமீபத்தில் தொகுப்பாளர் சுமா கனகலா நடத்திய ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.

Also Read
துரந்தர் கதாநாயகி…வைரலாகும் சாரா அர்ஜுனின் புகைப்படங்கள்
’துரந்தர்’ பார்த்து கண்ணீர் விட்ட நடிகையின் பெற்றோர்

அப்போது, ‘துரந்தர்’ படத்தைப் பார்த்த பிறகு தனது பெற்றோர் மகிழ்ச்சியில் கண்ணீர் விட்டதாகவும், அந்த நாள்தான் தனது வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியான நாள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது படிப்பை விடவும், ‘துரந்தர்’ திரைப்படம்தான் தனது பெற்றோரை அதிகமாக மகிழ்ச்சியடையச் செய்தது என்றும் நடிகை சாரா அர்ஜுன் குறிப்பிட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com