மாடலிங் துறையில் கால்பதித்த சச்சினின் மகள்... இணையத்தில் வைரலாகும் புகைப்படம்...!

சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் மட்டும் சாரா தெண்டுல்கரை சுமார் 16 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.
மாடலிங் துறையில் கால்பதித்த சச்சினின் மகள்... இணையத்தில் வைரலாகும் புகைப்படம்...!
Published on

லண்டன் ,

இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவானாக அறியப்படும் சச்சின் தெண்டுல்கர் - அஞ்சலி தம்பதியினரின் மூத்த மகள் சாரா தெண்டுல்கர். இவர் சமூக வலைதளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கக்கூடியவர். சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் மட்டும் சாரா டெண்டுல்கரை சுமார் 16 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.

23 வயதாகும் சாரா லண்டனில் மருத்துவம் படித்துள்ளார். விளையாட்டு துறையின் பக்கம் இருந்து இவர் ஒதுங்கி இருந்தாலும் ,அன்றாட வாழ்வில் எந்தவொரு விஷயத்தை செய்தாலும் அதை சமூகவலைத்தளங்களில் பகிரும் பழக்கமுடையவர் சாரா தெண்டுல்கர். இவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியை பார்ப்பதற்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

இந்த நிலையில் சாரா தெண்டுல்கர் தற்போது மாடலிங் துறையில் கால்பதித்துள்ளார். சமீபத்தில் இவர் அஜியோவின் உயர்தர பேஷன் பிரிவான அஜியோ லக்ஸ்க்கான விளம்பர பிரச்சாரத்தில் மாடலிங்கில் அறிமுகமானார். "சுய உருவப்படம்" என்ற இந்த விளம்பர பிரச்சாரத்தில் நடிகர் பனிதா சந்து மற்றும் டானியா ஷ்ராஃப் ஆகியோருடன் சாரா போஸ் கொடுத்துள்ளார். சாரா தெண்டுல்கரின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த விளம்பரதில், மூவரும் ஒன்றாகவும் தனித்தனியாகவும் போஸ் கொடுக்கிறார்கள்.

ஏற்கனவே இவர் இந்த ஆண்டின் தொடக்கத்தில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிம் உடைகள் பிராண்டிற்கு போஸ் கொடுக்கும் விளம்பரம் ஒன்றையும் வெளியிட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது .

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com