'எமகாதகி' பட நடிகையின் அடுத்த பட ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம்


Sarangapani Jathakam gets a new release date
x

இப்படம் வருகிற 18-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

சென்னை,

'உமா மஹேஷ்வர உக்ரா' என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானவர் ரூபா கொடுவாயுர். அப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து தமிழில் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கத்தில் கடந்த மாதம் 7-ந் தேதி வெளியான 'எமகாதகி' படத்தில் ரூபா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இப்படத்தில் நடித்ததற்காக அவருக்கு பாராட்டுகள் குவிந்தன. இதற்கிடையில், இவரது நடிப்பில் கடந்த ஆண்டே வெளியாக இருந்த படம் 'சாரங்கபாணி ஜாதகம்'. பிரியதர்ஷி புலிகொண்டா கதாநாயகனாக நடித்திருந்த இப்படத்தை மோகனகிருஷ்ணா இந்திரகாந்தி இயக்கி இருக்கிறார்.

சில காரணங்களால் தள்ளிப்போன இப்படம் வருகிற 18-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 25-ம் தேதி வெளியாக உள்ளது.

1 More update

Next Story