சரத்குமாரின் 177வது படத்தின் டைட்டில் அறிவிப்பு

சரத்குமார் நடிக்கும் 177-வது திரைப்படத்தின் அறிமுக விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.
சரத்குமாரின் 177வது படத்தின் டைட்டில் அறிவிப்பு
Published on: 

தனா இயக்கத்தில் சரத்குமார் நடிக்கும் 177-வது திரைப்படத்திற்கு ‘டாக்ஸி’ என பெயரிடப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் சரத்குமார். இதுவரை 176-ம் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார், பொன்னியின் செல்வன், போர் தொழில், பரம் பொருள் ஆகிய திரைப்படத்தின் நடித்ததன் மூலம் சரத்குமாருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

சரத்குமார் நடிக்கும் 177-வது படத்துக்கு ‘டாக்ஸி’ என பெயரிடப்பட்டுள்ளது. ஆக்ஷன் என்டர்டெயினராக உருவாகும் ‘டாக்ஸி’ திரைப்படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது.

இந்தப் படத்தை ‘வானம் கொட்டட்டும்’ பட இயக்குநர் தனா இயக்குகிறார். இவர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். சென்னையில் நடைபெற்ற அறிமுக விழாவில் இயக்குநர் மணிரத்னம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்தப் படத்தின் கதையை எழுத்தாளர் ஜெயமோகன் கதை எழுதியுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

நடிகை ராதிகாவின் ரேடான் மீடியா வொர்க்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X