சர்தார் 2 படம் : யுவன் சங்கர் ராஜாவிற்கு பதில் இவரா?


சர்தார் 2 படம் : யுவன் சங்கர் ராஜாவிற்கு பதில் இவரா?
x

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் 'சர்தார் 2' படம் வருகிற ஜூலை மாதம் வெளியாக உள்ளது.

கடந்த 2022-ம் ஆண்டு, கார்த்தியின் நடிப்பில் வெளியான படம் 'சர்தார்'. இப்படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கினார். தேசத்துரோகி என்று முத்திரை குத்தப்பட்ட உளவாளி, உண்மையில் தேசநலனுக்காக எத்தகைய தியாகங்களைச் செய்கிறார் என்பதே படத்தின் கதை. இதில் அப்பா- மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் கார்த்தி.

அதைத்தொடர்ந்து பி.எஸ். மித்ரன், கார்த்தி கூட்டணியில் சர்தார் 2 திரைப்படம் தற்போது உருவாகி வருகிறது. இதில் எஸ் ஜே சூர்யா, மாளவிாக மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, விஜய் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.

மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் விறுவிறுப்பாக படப்பிடிப்புகள் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படம் வருகிற ஜூலை மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இப்படம் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, முதலில் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால், தற்போது அவர் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக சாம் சி.எஸ் பணிபுரிந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் பாகத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக பணிபுரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story