''சர்தார் 2'' - வைரலாகும் மாளவிகா மோகனன் பகிர்ந்த புகைப்படங்கள்


Sardar 2 - Photos shared by Malavika Mohanan go viral
x

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

சென்னை,

''சர்தார் 2'' படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பின்போது கார்த்தியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை மாளவிகா மோகனன் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

கடந்த 2022-ம் ஆண்டு, கார்த்தியின் நடிப்பில் வெளியான படம் 'சர்தார்'. இதில் அப்பா- மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் கார்த்தி. இந்த படத்தின் வரவேற்பை தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகம் தயாராகி இருக்கிறது.

இதில் கார்த்தியுடன் முக்கிய கதாபாத்திரங்களில் எஸ். ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கும் நிலையில், இப்படம் வருகிற ஜூலை மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story