பூஜையுடன் துவங்கிய 'சர்தார் 2' படத்தின் டப்பிங் பணி


Sardar2 - dubbing begins with an auspicious pooja
x

பி.எஸ். மித்ரன், கார்த்தி கூட்டணியில் 'சர்தார் 2' திரைப்படம் உருவாகி வருகிறது.

சென்னை,

பருத்திவீரன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் கார்த்தி நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான படம் 'சர்தார்'. இப்படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கினார். இதில் அப்பா- மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் கார்த்தி.

இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து பி.எஸ். மித்ரன், கார்த்தி கூட்டணியில் 'சர்தார் 2' திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் எஸ் ஜே சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் டப்பிங் பணி பூஜையுடன் இன்று துவங்கி இருக்கிறது.

1 More update

Next Story