நடிகைகளின் உடை குறித்து பேச்சு - டிரோல்களை சந்திக்கும் பிரபல நடிகர்


Saree is beauty for women... - Famous actors controversial speech
x
தினத்தந்தி 23 Dec 2025 2:01 PM IST (Updated: 23 Dec 2025 3:14 PM IST)
t-max-icont-min-icon

பெண்களின் ஆடை பற்றி அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை,

பிரபல தெலுங்கு நடிகர் சிவாஜி. தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள படம் `தண்டோரா'. இப்படம் வருகிற 25ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பெண்களின் ஆடை பற்றி அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

அவர் பேசுகையில், ’ஹீரோயின்கள் கண்டபடி உடைகள் அணிந்தால், நீங்கள்தான் பிரச்சினையை சந்திக்க வேண்டி இருக்கும்.என்னைத் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம், நீங்கள் எடுத்துக்கொண்டாலும் எனக்குப் பிரச்சினை இல்லை.

எப்படி சமாளிப்பது என எனக்குத் தெரியும். உங்கள் அழகு முழுதாக மூடும் சேலையில்தான் உள்ளதே தவிர, அங்கங்கள் தெரியும்படி அணியும் உடைகளில் இல்லை' என்றார். இந்த பேச்சுக்கு இப்போது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.


1 More update

Next Story