நடிகை ஸ்ரீதேவி அணிந்த புடவைகள் ஏலம்

இங்கிலிஷ் விங்கிலீஷ் படத்துக்காக ஸ்ரீதேவி அணிந்து நடித்த புடவைகள் அனைத்தையும் ஏலத்தில் விட முடிவு செய்து இருப்பதாக இயக்குனர் கவுரி ஷிண்டே அறிவித்து உள்ளார்.
நடிகை ஸ்ரீதேவி அணிந்த புடவைகள் ஏலம்
Published on

அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்து முன்னணி கதாநாயகியாக கொடிகட்டி பறந்த நடிகை ஸ்ரீதேவி மரணம் அடைந்து 4 ஆண்டுகள் ஆன நிலையிலும் அவரது இழப்பை ஜீரணிக்க முடியாமல் ரசிகர்கள் தவிக்கின்றனர். ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியானார். எத்தனையோ சிறந்த வெற்றிப் படங்களில் நடித்து இருக்கிறார். இந்தி தயாரிப்பாளார் போனிகபூரை திருமணம் செய்த பிறகு 1997-ல் சினிமாவை விட்டு விலகி குடும்ப பொறுப்பை ஏற்கப்போவதாக அறிவித்தார்.

ஆனால் 2012-ல் 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். இந்த படத்தை கவுரி ஷிண்டே டைரக்டு செய்தார். இங்கிலீஸ் விங்கிலீஷ் ரிலீசாகி 10 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையொட்டி இங்கிலிஷ் விங்கிலீஷ் படத்துக்காக ஸ்ரீதேவி அணிந்து நடித்த புடவைகள் அனைத்தையும் ஏலத்தில் விட முடிவு செய்து இருப்பதாக இயக்குனர் கவுரி ஷிண்டே அறிவித்து உள்ளார்.

ஏலத்தின் மூலம் கிடைக்கும் தொகையை ஏழை சிறுமிகளுக்கு கல்வி உதவிகள் வழங்கும் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்க இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com