சரோஜா தேவி மறைவு - திரைப்பிரபலங்கள் இரங்கல்


Saroja Devi Passes Away - Celebrities Condolence
x
தினத்தந்தி 14 July 2025 11:38 AM IST (Updated: 14 July 2025 12:19 PM IST)
t-max-icont-min-icon

சரோஜா தேவியுடன் இணைந்து பணியாற்றிய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

சென்னை,

சரோஜா தேவியின் மறைவிற்கு திரைப்பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, மூத்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் பலர், சரோஜாதேவியுடன் இணைந்து பணியாற்றிய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

''பல கோடி ரசிகர்களின் மனம் கவர்ந்த மாபெரும் நடிகை சரோஜா தேவி இப்போது நம்முடன் இல்லை. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும'' - நடிகர் ரஜினிகாந்த்

அதன்படி, ''யாருடனும் ஒப்பிட முடியாத பெரும் கலைஞர். தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் கட்டும் முயற்சிக்கு தொடக்கத்திலிருந்தே துணைநின்றவர் . அவரது மறைவால் வாடும் ரசிகர்களுக்கு, குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன் '' - கருணாஸ்

''சரோஜா தேவியின் நடிப்பு ரசிக்கக்கூடியதாக இருக்கும், மிகவும் இனிமையானவர்'' - நடிகை ரோஹினி

''சினிமாவின் பொன்னான சகாப்தம் முடிவுக்கு வருகிறது. சரோஜாதேவி அம்மா எல்லா காலத்திலும் சிறந்த நடிகை. தென்னிந்தியாவில் வேறு எந்த நடிகைக்கும் அவரைப்போல பெயரும் புகழும் இல்லை. அவ்வளவு அன்பான, அழகானவர். அவரைச் சந்திக்காமல் எனது பெங்களூரு பயணம் முழுமையடையாது. அவரை மிகவும் மிஸ் செய்வேன்'' - குஷ்பு

''சரோஜா தேவியின் குரல் ரசிகர்களை காந்தம்போல இழுத்தது. எல்லாரோடும் நடித்துவிட்டார். கன்னடத்து நடிகையாக இருந்தாலும் அவ்வளவு அழகாக தமிழ் பேசுவார்'' - இசையமைப்பாளர் சங்கர் கணேஷ்

''தமிழ் சினிமா எத்தனையோ கதாநாயகிகளை சந்தித்திருந்தாலும், சரோஜா தேவி மட்டும் தனி இடம் பெற்றிருந்தார்'' - இயக்குனர் சித்ரா லட்சுமணன்

1 More update

Next Story