கொடைக்கானலில் 8 ஆண்டுகளுக்கு முன்பு நட்டு வைத்த மரத்தை பார்த்து சசிகுமார் பூரிப்பு

கொடைக்கானல் நட்சத்திர ஏரியை உருவாக்கிய ஹென்றி லெவிஞ் நினைவு துணை பார்த்து அந்த நினைவு தூணில் உள்ள தகவல்களை தனது செல்போனில் நடிகர் சசிகுமார் படம் பிடித்தார்.
கொடைக்கானலில் 8 ஆண்டுகளுக்கு முன்பு நட்டு வைத்த மரத்தை பார்த்து சசிகுமார் பூரிப்பு
Published on

சசிகுமார் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏரிச்சாலையில் உள்ள மகாத்மா காந்தி சிறுவர் பூங்காவில் நட்டு வைத்த மரத்தை பார்த்து சசிகுமார் பூத்து இருப்பதை கண்டு பூரிப்படைந்தார்.

சுப்ரமணியபுரம் திரைப்படம்

கடந்த 2008-ம் ஆண்டு வெளியான ‘சுப்ரமணியபுரம்’ திரைப்படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படங்களில் ஒன்றாகும். இப்படத்தை சசிகுமார் எழுதி, தயாரித்து, இயக்கியதுடன் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். மதுரையை பின்னணியாகக் கொண்டு உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

‘ஈசன்’ படத்தை இயக்கிய சசிகுமார் அதன்பின் நடிப்பதில் கவனம் செலுத்தினார். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'கருடன், நந்தன்' ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இவர் நடித்த 'டூரிஸ்ட் பேமலி' படம் மாபெரும் வெற்றி பெற்றது.

சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு பல்வேறு நாடுகள், பல மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அவ்வாறு வருபவர்கள் இங்குள்ள பல்வேறு முக்கிய இடங்களுக்கு சென்று புகைப்படம், வீடியோ எடுத்து செல்வதுடன் தங்கள் நினைவுகளையும் எடுத்து செல்கின்றனர்.

பூரிப்பு

அதன்படி நடிகரும் இயக்குனருமான சசிகுமார் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏரிச்சாலையில் உள்ள மகாத்மா காந்தி சிறுவர் பூங்காவுக்கு வந்தார். 'சுப்பிரமணியபுரம்' படப்பிடிப்பின் போது சக நடிகர், நடிகைகள் மற்றும் பல படக்குழுவினருடன் வந்து பல்வேறு இடங்களை பார்வையிட்டு இங்குள்ள பூங்காவில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

வரலாற்றுத் தூணைப் படம் பிடித்த நடிகர்

8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே இடத்திற்கு வந்த நடிகர் சசிகுமார் தான் நட்டு வைத்த மரங்கள் வேகமாக வளர்ந்து அதில் அதிக அளவு பூக்கள் பூத்து இருப்பதை கண்டு பூரிப்படைந்தார். மேலும் அந்த மரங்கள் அருகில் நின்று குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதே போல் கொடைக்கானல் நட்சத்திர ஏரியை உருவாக்கிய ஹென்றி லெவிஞ் நினைவு துணை பார்த்து அந்த நினைவு தூணில் உள்ள தகவல்களை தனது செல்போனில் படம் பிடித்தார்.

இயற்கையை நேசிக்க கற்றுக் கொள்வோம்

அப்போது அவர் தெரிவிக்கையில், “நாம் இந்த உலகில் வாழும்போது சில நினைவுகளை விட்டுச் செல்வோம். நமது குடும்பத்தில் உள்ள உறவுகள் கூட நம்மை மறந்து விடக்கூடும் ஆனால் இயற்கையாக விளங்கும் மரக்கன்றுகளை நட்டு வைத்து பராமரித்தால் அது உலகிற்கு நன்மை விளைவிக்கும். எனவே வாழும் காலங்களில் மரங்களை வளர்த்து இயற்கையை நேசிக்க கற்றுக் கொள்வோம்” என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com