அதர்வாவின் "டி.என்.ஏ" படத்தை பாராட்டிய சசிகுமார்

அதர்வா, நிமிஷா நடித்துள்ள ‘டி.என்.ஏ’ படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அதர்வாவின் "டி.என்.ஏ" படத்தை பாராட்டிய சசிகுமார்
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் அதர்வா. இவரது நடிப்பில் கடந்த 20-ந் தேதி 'டி.என்.ஏ' படம் வெளியானது. இந்த படத்தினை நெல்சன் வெங்கடேசன் இயக்கியிருந்தார். இதில் கதாநாயகியாக நிமிஷா சஜயன் நடித்திருந்தார்.

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் ரமேஷ் திலக், சேட்டன், ரித்விகா, பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஆக்சன் திரில்லர் கதையில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில், பிரபல இயக்குனரும் நடிகருமான சசிகுமார் 'டி.என்.ஏ' படத்தை பாராட்டி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "'டி.என்.ஏ' திரைப்படத்தின் மூலம் மீண்டும் ஒரு புதிய கதைக்களத்தை இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் காட்டியுள்ளார். அதர்வா, நிமிஷாவின் நடிப்பு அசத்தலாக உள்ளது. படக்குழுவுக்கு வாழ்த்துகள்!" என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com