சசிகுமார் படத்தின் பெயர் மாறியது

காப்புரிமை பிரச்சினையில் சிக்கிய சசிகுமார் படத்தின் பெயர் 'நான் மிருகமாய் மாற’ என மாற்றப்பட்டுள்ளது.
சசிகுமார் படத்தின் பெயர் மாறியது
Published on

சசிகுமார் நடிக்கும் ஒரு புதிய படத்துக்கு, 'நான் மிருகமாய் மாற' என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். 'கழுகு' படத்தை இயக்கிய சத்யசிவா டைரக்டு செய்கிறார். இதில் ஹரிப்ரியா கதாநாயகியாக நடிக்கிறார். விக்ராந்த் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்தப் படத்தை பற்றி டைரக்டர் சத்யசிவா கூறுகிறார்:-

"இந்தப் படத்துக்கு முதலில், 'காமன் மேன்' என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது. இதே பெயரை வேறு ஒரு நிறுவனம் வைத்திருப்பதால் பெயர் மாற்றப்பட்டது. படத்தை செந்தூர் பிலிம்ஸ் சார்பில் டி.ராஜா, டி.ஆர்.சஞ்சய்குமார் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள்."

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com