சசிகுமாரின் "பிரீடம்" படத்திற்கு "யு/ஏ" சான்றிதழ்


சசிகுமாரின் பிரீடம் படத்திற்கு யு/ஏ சான்றிதழ்
x
தினத்தந்தி 7 July 2025 6:39 PM IST (Updated: 18 July 2025 10:06 AM IST)
t-max-icont-min-icon

சசிகுமார் நடித்துள்ள 'பிரீடம்' திரைப்படம் வருகிற 10ம் தேதி வெளியாக உள்ளது.

சென்னை,

சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் அண்மையில் டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றி தொடர்ந்து சசிகுமார் பீரிடம் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தினை சத்யசிவா இயக்கி உள்ளார்.

இதில் கதாநாயகியாக லிஜோமோல் ஜோஸ் நடித்துள்ளார்' இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். தவறே செய்யாமல் இலங்கை அகதிகளாக சிறைச்சாலையில் சிக்கிக்கொண்ட இருவர் தப்பித்து செல்வதுப் போன்ற கதைக்களத்தில் இப்படம் அமைந்துள்ளது. இத்திரைப்படம் வரும் 10 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இதற்கிடையில் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ மற்றும் பாடல்கள் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்று வருகிறது. படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் தணிக்கை வாரியம் பீரிடம் படத்திற்கு "யு/ஏ" சான்றிதழ் வழங்கியுள்ளது. டூரிஸ்ட் பேமிலி படத்தை போல இப்படமும் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story