சசிகுமாரின் புதிய படம் பூஜையுடன் துவக்கம்

இயக்குநர் தரணி ராஜேந்திரன், கன்னட இயக்குநர் யோகராஜ் பட் படங்களில் சசிகுமார் தற்போது பிஸியாக உள்ளார்.
சசிகுமாரின் புதிய படம் பூஜையுடன் துவக்கம்
Published on: 

சசிகுமார் நடிக்கவுள்ள புதிய படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளன.

‘சுப்ரமணியபுரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சசிகுமார். 'ஈசன்’ படத்தை இயக்கிய சசிகுமார் அதன்பின் நடிப்பதில் கவனம் செலுத்தினார். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘கருடன், நந்தன்’ ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இவர் நடித்த ‘டூரிஸ்ட் பேமலி’ படம் மாபெரும் வெற்றி பெற்றது.

விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்ற ‘அயோத்தி’ திரைப்படத்தை தொடர்ந்து, மீண்டும் டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்துடன் புதிய படத்திற்காக சசிகுமார் இணைந்துள்ளார்.

திரைப்படத்தின் படப்பிடிப்பு துவக்கம்

தற்காலிகமாகப் பெயரிடப்படாத இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் அதிகாரப்பூர்வமாகத் துவங்கியுள்ளதாகப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இத்திரைப்படத்தின் இயக்குநர், பிற நடிகர்-நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் கதைக்களம் குறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரம்மாண்ட தயாரிப்புக் கூட்டணி

இத்திரைப்படத்தை டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் ரவீந்திரனுடன் இணைந்து சுல்தான் ஜசானி மற்றும் சேத்தன் தியோலேகர் ஆகியோர் தயாரிக்கின்றனர். இணைத் தயாரிப்பில் கிரிஷ் கே. நகரேச்சா ஆகியோரும் கிரியேட்டிவ் புரொடியூசர் சஞ்சய் விஜயராகவன், ஆதரவு நிறுவனம் 6 டைமென்ஷன்ஸ் பிலிம் அண்ட் மீடியா ஆகியோர் இணைந்து பணியாற்றுகின்றனர்.

சசிகுமாரின் அடுத்தடுத்த திரைப்படங்கள்

தற்போது சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘பிரீடம்’ திரைப்படம் விரைவில் வெளியாகக் காத்திருக்கிறது. இதுமட்டுமல்லாமல், ‘யாத்திசை’ பட இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் ஒரு புதிய படத்திலும், கன்னட இயக்குநர் யோகராஜ் பட் இயக்கத்தில் ஒரு புதிய திட்டத்திலும் சசிகுமார் பிஸியாகப் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com