சசிகுமாரின் புதிய படத்தின் போஸ்டர் வெளியீடு

சசிகுமாரின் 'ப்ரீடம் ஆகஸ்ட் - 14' படத்தின் புதிய போஸ்டர் இணையத்தில் வைரலாகியுள்ளது.
சசிகுமாரின் புதிய படத்தின் போஸ்டர் வெளியீடு
Published on

இயக்குநரும் நடிகருமான சசிகுமார் புதிய படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார். கழுகு படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார் இணைந்துள்ளார். இப்படத்திற்கு 'ப்ரீடம் ஆகஸ்ட் - 14' எனப் பெயரிட்டுள்ளனர். இப்படத்தின் நாயகியாக லிஜோமோல் ஜோஸ் நடிக்கிறார். இப்படத்தை பாண்டியன் பரசுராமன் தயாரிக்கிறார். சிநேகன், மோகன் ராஜா பாடல்களை எழுதுகின்றனர். படம் தமிழ் தவிர, தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

விஜய கணபதி பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.இந்நிலையில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகியுள்ளது.

படம் சுதந்திர போராட்டம் பற்றிய கதையா அல்லது வேறு எதேனும் நிகழ்வை மையப்படுத்தியதா என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com