'சதிலீலாவதி' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்

லாவண்யா திரிபாதி நடிக்கும் புதிய படத்திற்கு 'சதிலீலாவதி' எனப்பெயரிடப்பட்டுள்ளது
SathiLeelavathi shoot begins with Pooja Ceremony
Published on

சென்னை,

தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ள லாவண்யா திரிபாதி, தமிழில் 'பிரம்மன்' படத்தில் சசிகுமார் ஜோடியாக நடித்து பிரபலமானார். அதனைத்தொடர்ந்து 'மாயவன்', 'தணல்' உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடந்த 2023-ம் ஆண்டு லாவண்யா திரிபாதிக்கும், தெலுங்கு முன்னணி நடிகர் சிரஞ்சீவியின் சகோதரர் நாகபாபுவின் மகனும் நடிகருமான வருண் தேஜுக்கும் திருமணம் நடந்தது.

சமீபத்தில் லாவண்யா திரிபாதி நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது. அதன்படி, தாதினேனி சத்யா இயக்கும் இப்படத்திற்கு 'சதிலீலாவதி' எனப்பெயரிடப்பட்டுள்ளது. 'சகுந்தலம்' படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமான மலையாள நடிகர் தேவ் மோகன் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

இந்நிலையில், சதிலீலாவதி படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கி இருக்கிறது. இது தொடர்பான வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com