38 வருடங்களுக்கு பிறகு ரஜினி படத்தில் நடிக்கும் சத்யராஜ்?

நடிகர் ரஜினி படத்தில் சத்யராஜ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Sathyaraj and Rajinikanth to share screen space after 38 years!
Published on

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியானது. அதில் இப்படத்திற்கு 'கூலி' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

'கூலி' படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளதாக தெரிகிறது. அதன்படி அடுத்த மாதம் 6-ம் தேதி சென்னையில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தில் முக்கிய நட்சத்திரங்கள் பலர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் உண்மையானால் 38 வருடங்களுக்கு பிறகு ரஜினிகாந்த் படத்தில் சத்யராஜ் நடிக்கும் படமாக 'கூலி' அமையும்.

முன்னதாக, கடந்த 2008-ம் ஆண்டு வெளியான சிவாஜி படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க சத்யராஜிடம் படக்குழு பேசியதாக தெரிகிறது, ஆனால் அதனை சத்யராஜ் மறுத்ததால் சுமன் அதில் நடித்ததாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com