சத்யராஜ், சிபிராஜின் 'ஜாக்சன் துரை' 2-ம் பாகம்... காமெடி பேய் படம்

சிபிராஜ், சத்யராஜ் இணைந்து நடித்து 2016-ல் திரைக்கு வந்து நல்ல வசூல் பார்த்த ‘ஜாக்சன் துரை' காமெடி பேய் படத்தின் இரண்டாம் பாகமும் தயாராக இருப்பதாக அறிவித்து உள்ளனர்.
சத்யராஜ், சிபிராஜின் 'ஜாக்சன் துரை' 2-ம் பாகம்... காமெடி பேய் படம்
Published on

தமிழில் வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. இந்த நிலையில் சிபிராஜ், சத்யராஜ் இணைந்து நடித்து 2016-ல் திரைக்கு வந்து நல்ல வசூல் பார்த்த 'ஜாக்சன் துரை' காமெடி பேய் படத்தின் இரண்டாம் பாகமும் தயாராக இருப்பதாக அறிவித்து உள்ளனர்.

'ஜாக்சன் துரை' 2 படத்திலும் சத்யராஜ், சிபிராஜ் இணைந்து நடிக்கிறார்கள். நாயகியாக சம்யுக்தா விஸ்வநாதன் நடிக்கிறார். சரத் ரவி, மணிஷா ஐயர், பாலாஜி, ரசிகா, யுவராஜ் கணேசன் உள்பட மேலும் பலர் நடிக்கின்றனர். ஜாக்சன் துரை 2-ம் பாகத்தையும் பி.வி. தரணிதரன் டைரக்டு செய்கிறார். எம்.எஸ்.சரவணன், எஸ்.ஆர்.பாத்திமா தயாரிக்க கல்யாண் வெங்கட்ராமன் ஒளிப்பதிவில் சித்தார்த் விபின் இசையமைக்கிறார்.

ஜாக்சன் துரை 2 படத்துக்காக 1940-ல் ஊட்டியின் அருகிலுள்ள கிராம பின்னணியில் பிரிட்டிஷ் கால கட்டத்தைக் கொண்டு வருவதற்காக மிகுந்த ஆராய்ச்சி செய்து, அக்காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் கட்டிடங்களைக் கண்டுபிடித்து, அதே போல் செட் அமைத்து படமாக்கவுள்ளனர். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளில் பான் இந்தியா படமாக தயாராக உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com