சவினின் “வாழ 2” - முதல் நாளில் ரூ.10 கோடி வசூல்

சவின் இயக்கத்தில் ‘வாழ 2’ படம் வெளியான முதல் நாளிலேயே, 10 கோடி ரூபாய் வசூல் ஈட்டியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
சவினின் “வாழ 2” - முதல் நாளில் ரூ.10 கோடி வசூல்
Published on

கடந்த 2024-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ’ (பயோபிக் ஆப் பில்லியன் பாய்ஸ்). இப்படத்தை பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான விபின் தாஸ் தயாரித்திருந்தார். இவர் இதற்கு முன்னதாக ''ஜெய ஜெய ஜெய ஜெய ஹே'', ''குருவாயூர் அம்பல நடையில்'' உள்ளிட்ட படங்களை இயக்கி இருந்தார்.

சவின் இயக்கிய ‘வாழ’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து, இதன் இரண்டாம் பாகத்தை இதே இயக்குனர் மற்றும் நட்சத்திரங்களுடன் உருவாக்க இருப்பதாக விபின் தாஸ் அறிவித்திருந்தார். இதனால், இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. இப்படத்திற்கு ‘வாழ 2’ (பயோபிக் ஆப் பில்லியன் புரோஸ்) எனப்பெயரிடப்பட்டது. இப்படம் கடந்த 2ம் தேதி வெளியானது.

இந்நிலையில், ‘வாழ 2’ வெளியான முதல் நாளிலேயே, 10 கோடி ரூபாய் வசூல் ஈட்டியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com