சவினின் “வாழ 2” படத்தின் டிரெய்லர் வெளியானது

சவின் இயக்கும் ‘வாழ 2’ படம் வரும் ஏப்ரல் 2ம் தேதி வெளியாகிறது.
சவினின் “வாழ 2” படத்தின் டிரெய்லர் வெளியானது
Published on

கடந்த 2024-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ’ (பயோபிக் ஆப் பில்லியன் பாய்ஸ்). இப்படத்தை பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான விபின் தாஸ் தயாரித்திருந்தார். இவர் இதற்கு முன்னதாக ''ஜெய ஜெய ஜெய ஜெய ஹே'', ''குருவாயூர் அம்பல நடையில்'' உள்ளிட்ட படங்களை இயக்கி இருந்தார்.

சவின் இயக்கிய ‘வாழ’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து, இதன் இரண்டாம் பாகத்தை இதே இயக்குனர் மற்றும் நட்சத்திரங்களுடன் உருவாக்க இருப்பதாக விபின் தாஸ் அறிவித்திருந்தார். இதனால், இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. இப்படத்திற்கு ‘வாழ 2’ (பயோபிக் ஆப் பில்லியன் புரோஸ்) எனப்பெயரிடப்பட்டது. தணிக்கை வாரியம் ‘வாழ 2’ படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.

இந்நிலையில், ‘வாழ 2’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படம் வரும் ஏப்ரல் 2ம் தேதி வெளியாகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com