ஒரு சகாப்தத்திற்கு விடை கொடுப்பது நெஞ்சை உலுக்குகிறது - யோகிபாபு

பாக்யராஜ் சாரின் கலைப்பயணமும் புகழும் என்றும் நிலைத்திருக்கும் நடிகர் யோகி பாபு கூறியுள்ளார்.
ஒரு சகாப்தத்திற்கு விடை கொடுப்பது நெஞ்சை உலுக்குகிறது - யோகிபாபு
Published on

சென்னை

இயக்குனரும் நடிகரும் பாக்யராஜ் மறைவு குறித்து நடிகர் யோகி பாபு கூறியதாவது:-

ஒரு சகாப்தத்திற்கு விடை கொடுப்பது நெஞ்சை உலுக்குகிறது. தமிழ் சினிமாவிற்கு மறக்க முடியாத பல காவியக் கதைகளைத் தந்தவர் அவர்.

பாக்யராஜ் சாரின் படைப்பாற்றல், எளிமை, நகைச்சுவை மற்றும் சினிமா மீதான அவரது பேரார்வம் பல தலைமுறை கலைஞர்களுக்கும் இயக்குநர்களுக்கும் மிகப்பெரிய உத்வேகமாக இருந்தது. அவரது கலைப்பயணமும் புகழும் என்றும் நிலைத்திருக்கும்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com