

பாட்டுக்குள் எத்தனையோ மேஜிக்குகளை நிகழ்த்திய எஸ்பி.பி., தன் குரலில் போதையை கொண்டு வருவதிலும் கில்லாடி.
பாடலுக்குள் இருமலையும் கொண்டு வந்திருக்கிறார் இந்த குரல் வித்தகர்.
பாட்டுக்குள் போதையையும் இருமலையும் கூட கொண்டு வந்த எஸ்.பி.பிக்கு அதே பாடலுக்குள் அழுகையை கொண்டு வருவது மட்டும் சிரமமா என்ன? இவரின் சங்கீத ஜாதி முல்லை... பாடுபவரையும் அழ வைக்கும் கேட்பவரையும் அழ வைக்கும்.
பொதுவாக பாடல்களை உச்சரிப்பு சுத்தமாக பாடக் கூடிய எஸ்.பி.பாலசுரமணியம், பாமரத்தனம் வர வேண்டும் என்பதற்காக அதை தளர்த்துவதுண்டு. உச்சி வகுந்தெடுத்து பாடலில் அவர் நியாயம் என்பதை நாயம் என்றுதான் உச்சரித்திருப்பார். அது அந்த பாமரத்தனமான கதாநாயகனுக்கு அப்படியே பொருந்தியிருக்கும்.
பாடல்களுக்குள் இவ்வளவு மேஜிக்குகளை நிகழ்த்திக் காட்டிய எஸ்பிபி., பாடலுக்குள் ஜாலியாக அடிக்கவும் செய்திருக்கிறார்.
சினிமா பாடல்களுக்குள் சாத்தியமே இல்லாத இவ்வளவு விஷயங்களை சாத்தியப்படுத்திக் காட்டிய எஸ்.பி.பி போல இன்னொரு நபர் இருக்க முடியுமா என்றால் சான்ஸே இல்லை என்பதுதான் இசை ரசிகர்களின் பதில்!