"எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்" - எஸ்.பி.பி. சரண் தகவல்

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விரைந்து குணமடைந்து வருவதாக என அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார்.
"எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்" - எஸ்.பி.பி. சரண் தகவல்
Published on

சென்னை,

பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த தகவலை அவரே சமூக வலைளத்திலும் வெளியிட்டார்.

இதனை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது. இதனையடுத்து வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் எஸ்பிபிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விரைவில் குணமடைய பல்வேறு திரை உலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கூட்டு பிரார்த்தனைகள் மேற்கொண்டனர். அவருடைய மகன் எஸ்.பி.பி. சரண் அவ்வப்போது தந்தையின் உடல்நிலை குறித்த வீடியோ வெளியிட்டு வருகிறார்.

அதன்படி, இன்று எஸ்.பி.பி. சரண் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-

எனது அப்பா எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விரைந்து குணமடைகிறார். அவர் நேற்றில் இருந்து உணவு எடுத்துக் கொள்கிறார். மருத்துவர்கள் உதவியுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் எழுந்து உட்காருகிறார். அவருக்கு தொடர்ந்து மருத்துவக்குழு தீவிர சிசிச்சை அளித்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com