என் பெயர், குடும்ப பெயரை பயன்படுத்தி மோசடி - அக்ஷரா ஹாசன் எச்சரிக்கை


என் பெயர், குடும்ப பெயரை பயன்படுத்தி மோசடி - அக்ஷரா ஹாசன் எச்சரிக்கை
x

தனது பெயரை பயன்படுத்தி ஒரு நபர் மோசடி செய்து வருவதாக நடிகை அக்‌ஷரா ஹாசன் தெரிவித்துள்ளார்.

தனது பெயர் மற்றும் குடும்ப பெயரை பயன்படுத்தி ஒரு நபர் மோசடி செய்து வருவதாக நடிகையும், கமல்ஹாசனின் மகளுமான அக்ஷரா ஹாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அக்ஷரா தெரிவித்திருப்பதாவது:-

இப்ராஹிம் அக்தர் என்ற நபர் எனது பெயரையும், எனது குடும்பத்தின் பெயரையும் தவறாகப் பயன்படுத்தி, ஊட்டியில் அலுவலகம் வைத்துக்கொண்டு திரைப்படத் தயாரிப்புப் பணிகளில் நாங்கள் ஈடுபட்டு வருவதாக கூறி வருகிறார். இந்த கூற்றுகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை. அவருக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

இந்த விவகாரத்தில் தேவையான சட்ட நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகிறோம். தயவுசெய்து அவரிடம் இருந்து எச்சரிக்கையாக இருங்கள். எந்த வகையிலும் அவரிடம் தொடர்பு கொள்ளவோ அல்லது அவரை ஊக்குவிக்கவோ வேண்டாம். உங்கள் கவனத்திற்கும், தொடர்ந்து அளித்து வரும் ஆதரவிற்கும் நன்றி. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


1 More update

Next Story