தீபாவளி ரிலீஸுக்குத் தயாராகும் ‘சீன்’... புதிய போஸ்டர் வெளியீடு!

சூர்யா, நஸ்லென், நஸ்ரியா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் தீபாவளியை ஒட்டி வரும் நவ.06ம் தேதி வெளியாகிறது.
தீபாவளி ரிலீஸுக்குத் தயாராகும் ‘சீன்’... புதிய போஸ்டர் வெளியீடு!
Published on: 

சென்னை,

சீன் படதாயாரிப்பு நிறுவனமான ழகரம் ஸ்டியோஸ் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

சூர்யா 47

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் அவரது 47-வது படத்தை பிரபல மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கி வருகிறார். இப்படத்தில் மலையாள நடிகர்கள் நஸ்லேன், நஸ்ரியா நசீம், லால், ஆனந்தராஜ், ராஜ்பிரியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

போலீஸ் அதிகாரியாக சூர்யா

‘ஆவேஷம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ஜித்து மாதவன் இயக்கும் இப்படத்தில் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட், ழகரம் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைக்கிறார். வினீத் அகஸ்டியன் ஒளிப்பதிவு செய்கிறார். சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம், நடிகர் சூர்யாவின் இரண்டாவது தயாரிப்பு நிறுவனமான ழகரம் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்படுகிறது.

நவம்பர் 6-ந்தேதி ரிலீஸ்

சூர்யா நடிப்பில் வெளியான ‘கருப்பு’, ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து வெளியாகும் ‘சீன்’ திரைப்படம் நவம்பர் 6-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், இந்த படத்தில் இருந்து ‘ஆத்தி யார்ரா இவ’, ‘ஏரோபிளேன்’ என்ற பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி வைரலாகின. இந்த பாடல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்து வருகின்றன. இதற்கிடையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா, வருகிற 25ந் தேதி துபாயில் உள்ள சிலிகான் சென்ட்ரல் மாலில், மாலை 6 மணிக்கு இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய போஸ்டர் வெளியீடு

இந்த நிலையில், சீன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகிற நவம்பர் மாதம் 6ந் தேதி வெளியாக உள்ளநிலையில், சீன் படதாயாரிப்பு நிறுவனமான ழகரம் ஸ்டியோஸ் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com