"அரசன்" படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தொடக்கம்

சென்னையில் ‘அரசன்’ படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
"அரசன்" படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தொடக்கம்
Published on

சென்னை,

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு 'அரசன்' படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. வடசென்னை கதைகளத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் சமுத்திரகனி, கிஷோர், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கேங்க்ஸ்டர் கதைகக்களத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

முதற்கட்டமாக கோவில்பட்டி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் நடைபெற்றது. இதில் சிலம்பரசன் 'மதுரை டைகர்' என்ற கேரக்டரில் நடிப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்களும் சமீபத்தில் இணையத்தில் பரவி வைரலாகின.

இந்த நிலையில், சென்னையில் ‘அரசன்’ படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமான நகரக் காட்சிகள் மற்றும் அதிரடிச் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. சுமார் 35 நாட்கள் இந்த படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com