

சென்னை,
நடிகர் அதர்வா 'பாணா காத்தாடி, பரதேசி, சண்டிவீரன்' போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் நடித்த 'டிஎன்ஏ' படம் நல்ல வரவேற்பை பெற்றது சுதா கொங்கரா இயக்கி வரும் 'பராசக்தி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
ஆகாஷ் பாஸ்கரின் இயக்கத்தில் ‘இதயம் முரளி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதர்வாவுடன் இணைந்து பிரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், நட்டி நட்ராஜ், ரக்சன், தமன், நிஹாரிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். ஏற்கனவே தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நடிகர் அதர்வாவின் அப்பாவான முரளி ‘இதயம்’ படத்தில் நடித்து பிரபலமானார். முரளிக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதைப்போல் அதர்வாவிற்கும் ‘இதயம் முரளி’ திரைப்படம் வெற்றிப் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ‘இதயம் முரளி’ படத்தின் ‘தங்கமே தங்கமே’ பாடல் வரும் 28-ந்தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.