ரகசிய திருமணம் செய்து கொண்டதாக வதந்தி - ரகுல்பிரீத் சிங் வருத்தம்

ரகசிய திருமணம் செய்து கொண்டதாக வதந்தி - ரகுல்பிரீத் சிங் வருத்தம்
Published on

நடிகர், நடிகைகள் பெரும்பாலும் தங்கள் காதல் விவகாரங்களை ரகசியமாக வைத்து இருப்பது வழக்கம். காதலை வெளிப்படுத்தினால் தேவையில்லாத வதந்திகள் பரவும் என்றும் சினிமா மார்க்கெட் சரியும் என்றும் அச்சம் இருப்பதே இதற்கு காரணம். ஆனால் தமிழ், தெலுங்கில் பிரபல நடிகையாக இருக்கும் ரகுல்பிரீத் சிங் இதற்கு நேர்மறையானவர். இந்தி தயாரிப்பாளர் ஜாக்கி பத்னானியை காதலிப்பதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இன்ஸ்டாகிராமில் அறிவித்தார். காதலை மறைத்து வைப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. இப்போது வாழ்க்கையில் நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் என்றார்.

இந்த நிலையில் தற்போது தனது திருமணம் குறித்து பரவும் வதந்திகளுக்கு பதில் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், 'பிரபலமானவர்கள் தங்கள் காதலை மறைத்து வைப்பது அவ்வளவு சுலபம் அல்ல. அதனால்தான் நான் முன்னரே சொல்லிவிட்டேன். இப்போது எனது திருமணம் பற்றி நிறைய தகவல்கள் பரவுகின்றன. நான் ரகசிய திருமணம் செய்து கொண்டேன் என்று ஏற்கனவே வதந்திகள் வந்தன. சில மாத இடைவெளிக்கு பிறகு இப்போது மீண்டும் எனக்கு திருமணம் நடந்துள்ளதாக தகவல் பரவி உள்ளது. எனக்கு இர ண்டு முறை திருமணம் செய்து விட்டார்கள்'' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com