ரீ-ரிலீஸ் கலாச்சாரத்தில் இணைந்த சீமானின் 'தம்பி' திரைப்படம்


ரீ-ரிலீஸ் கலாச்சாரத்தில் இணைந்த சீமானின் தம்பி திரைப்படம்
x
தினத்தந்தி 7 Jan 2026 12:48 PM IST (Updated: 7 Jan 2026 6:40 PM IST)
t-max-icont-min-icon

சீமான் எழுதி இயக்கிய 'தம்பி' படத்தை ரீ-ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

சென்னை,

சமீப காலமாக 90கள் மற்றும் 2000களின் ஹிட் படங்கள் பலவும் டிஜிட்டல் முறையில் புதுப்பித்து மீண்டும் ரீ-ரிலீஸ் செய்து வருகிறார்கள். அந்த வரிசையில், ரீ-ரிலீஸ் கலாச்சாரத்தில் சீமான் எழுதி இயக்கிய 'தம்பி' படமும் இணைந்துள்ளது.

அதாவது, சீமான் இயக்கத்தில் மாதவன் நடிப்பில் கடந்த 2006ம் ஆண்டு வெளியான 'தம்பி' திரைப்படம் 20 வருடங்களுக்குப் பிறகு ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்த படத்தில் பூஜா, வடிவேலு , மணிவண்ணன் மற்றும் பிஜு மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

வருகிற பிப்ரவரி மாதம் தம்பி படத்தை மீண்டும் திரைக்கு கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

1 More update

Next Story