பராசக்தி படம் பார்த்துவிட்டு சீமான் ரிவ்யூ


பராசக்தி படம் பார்த்துவிட்டு சீமான் ரிவ்யூ
x

"செழியன் கதாபாத்திரம் உண்மையாக இருக்குமா?"என்ற கேள்விக்கு, அந்த செழியன் நான்தான் என்று சீமான் பதில் அளித்தார்.

சென்னை,

பராசக்கதி திரைப்படத்தை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பார்த்தார். படம் பார்த்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "தமிழ் திரைப்படத்தில் தமிழ் வாழ்க என்று ஒரு சத்தம் கேட்பது வியக்க வைத்தது. விரும்பினால் எம்மொழியும் கற்போம். ஈழத்தில் நாங்கள் எங்கள் தாய் நிலத்தை இழந்து பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக போனோம். ஒரு மொழி தேவை என்றால் கற்று கொள்வோம்.

ஒரு மொழியை கற்றுக்கொள்ள அதிகபட்சமாக ஆறு மாதம் ஏழு மாதம் ஆகும். கடந்த 3 தலைமுறைகளாக தாய் மொழியை எழுத படிக்க தெரியாத ஒரு தலைமுறையை உருவாக்கியுள்ளோம். தமிழ் படிக்காமலேயே உயர்ந்த பட்டம் பெற்று பணிக்கு சென்றுவிடலாம் என்ற சூழல் உருவாகிவிட்டது. நமக்கு தமிழ் பேசத் தெரியவில்லை. வலுக்கட்டாக ஆங்கில சொற்களை சேர்த்து, தங்கிலீஸ் உருவாக்கிவிட்டோம்.

மொழி போரில் ஏற்பட்ட புரட்சியால் ஆட்சியை பிடித்த திமுக இந்தி எதிர்ப்பில் உறுதியாக இல்லை" என்று விமர்சித்தார்.

அப்போது பராசக்தி படத்தில் வரும்"செழியன் கதாபாத்திரம் உண்மையாக இருக்குமா?"என்ற கேள்விக்கு, அந்த செழியன் நான்தான் என்று சீமான் பதில் அளித்தார்.

1 More update

Next Story