படங்கள் வெற்றி பெற சீனு ராமசாமி யோசனை

தமிழ் திரையுலகில் பிரபல டைரக்டராக இருக்கும் சீனுராமசாமி படங்களை வெற்றி பெறச் செய்வதற்கான யோசனைகளை தெரிவித்து உள்ளார்.
படங்கள் வெற்றி பெற சீனு ராமசாமி யோசனை
Published on

இதுகுறித்து முகநூல் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ''திரைப்படம் கவனம் பெற முதலில் மழை பெய்யவே கூடாது. கிரிக்கெட் வீரர்களின் மைதானம் காலியாக இருக்க வேண்டும். பரிட்சை காலங்கள் முடியும் வரை படம் வெளியிடாமல் காத்திருப்போர் புத்திசாலிகள். போஸ்டர்கள் முதல்நாள் இரவு ஒட்டியிருத்தல் அவசியம். ஒரு படம் கவனம் பெற பெரிய நடிகர்கள் கொண்டு விளம்பரம் செய்வது சிறந்தது. படம் வெற்றி பெற முதலில் படம் நேர்த்தியாக ரசிகர்களை கவரும்படி இருக்க வேண்டும் இது அடிப்படை விதி. அரசியல் தொண்டுடையோர் இத்துறைக்கு வருதல் வரம். சிறந்த படங்கள் குறைவான தியேட்டர்களில் வெளியாகி குறை கூட்டமாக இருந்தாலும் வாய்மொழிப் பரவி மக்கள் தியேட்டர் வருவதுவரை தியேட்டர் அதிபர்கள் பொறுமை அருள வேண்டும். ஒரு படம் கவனம் பெற பெரிய படங்களுடன் மோதாமல் தனியே வருதல் முக்கியம்'' என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com